இந்நிலையில் சம்பவ நாளான நேற்று மணிமாலா கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மாலையில் வழக்கு விசாரணை முடிந்து தனது ஊருக்கு செல்ல நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த மணிமாலா மீது ரமேஷ் வந்த காரை ஓட்டி வந்த 22 வயதான பாண்டித்துரை என்ற இளைஞர் மணிமாலாமீது காரை மோதி கொலை செய்யும் முயற்றியில் ஈடுபட்டார். இந்த நிலையில் பலத்த காயங்களுடன் மணிமாலா தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து காரை ஓட்டி வந்து மோதிவிட்டு தப்பி ஓட முயன்ற பாண்டித்துரை, மணிமாலாவின் கணவர் ரமேஷ், இவர்களுடன் வந்த முருகன் ஆகிய மூவரையும் கைது செய்த போலிசார் போடி உட்கோட்ட கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வந்த காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

