‘வடக்கன்’ படத்தின் பெயரை மாற்றம் செய்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்கு வடக்கன் எனப் பெயரிடப்பட்டது.
புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
From the Desk of Discovery Cinemas M.Vediyappan,
03/06/2024
வணக்கம்!
எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் #வடக்கன் திரைப்படத்தின் பெயர்,
தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது #ரயில் என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை… pic.twitter.com/NOLS6Lh67I
— Nikil Murukan (@onlynikil) June 3, 2024
வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை எனவும், படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘ரயில்’ எனப் பெயர் மாற்றம் செய்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், ரயில் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
