அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் ஜூலை 12-ஆம் தேதி இந்து முறைப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சி லண்டனில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் ஜூலை 12-ஆம் தேதி மும்பையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான பாந்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
ஜூலை 12ம் தேதி திருமண நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஜூலை 13ம் தேதி தெய்வீக ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூலை 14ம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:
2024ஆம் ஆண்டில் இந்தியாவின் கோடைகால பயணங்கள் 40% உயர்வு! முழு விவரம்
அனந்த் அம்பானி- ராதிகா திருமணத்தில் விஐபிக்கள் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
.
- First Published :
