Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2024
in Default
1
ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர். இதனை முற்றிலும் தவறானது, அவர் ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர். 

இதனை முற்றிலும் தவறானது. அவர் ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும். அவர், அனைத்து மதத்தினருக்கும், சாதியினருக்குமான தலைவராக இருந்தார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஒருவேளை இந்துத்துவா தலைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் உள்ளது என்றார்‌.

ராமநாதபுரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றிக்காக காத்திருக்கிறோம் அவர் மாபெரும் வெற்றியை பெறுவார் என நம்புகிறோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இடத்திலும் வெற்றி பெறப் போவதில்லை. அவர் அடுத்த முறை தூத்துக்குடிக்கு வரும்போது பொதுச் செயலாளராக இருக்க மாட்டார் என தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கான திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு என்பது முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். 

மின்சார துண்டிப்பு இல்லாமல் இருப்பது உங்கள் கடமை மின்சார துண்டிப்பு இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், கோடநாடு கொலை வழக்கில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை ஊழல் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்படவில்லை இதை சொல்வதால் முதல்வர் கோவித்துக் கொண்டாலும் பரவாயில்லை கோடநாடு கொலை வழக்கு 3 1/2 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே சென்று விட்டது ஒருவரை கூட கைது செய்யப்படவில்லை எதற்காக வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

சவுக்கு சங்கரை பொறுத்தவரையில் என்ன கோபம் என்றால் எங்களைப் பற்றி கூட ஒரு பதிவு போட்டார. நாங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. சவுக்கு சங்கர் போல் ஆட்கள் பேசுவது முற்றிலும் தவறு மிகவும் மோசமான தவறு என்றார். 

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அன்போடு அழைக்கிறேன் ஆனால் ரஜினி போல் இல்லாமல் நல்ல நோக்கத்தோடு வரவேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். 

Previous Post

குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தை அம்பானி இல்ல திருமணத்திற்காக சர்வதேச நிலையமாக மாற்றியது எப்படி..? அதிர்ச்சி பதிலளித்த DGCA…

Next Post

சிக்கிமில் இருந்து 10 நிமிட தொலைவில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியது சீனா..! குழப்பம் கலந்த பதற்றத்தில் இந்தியா..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிக்கிமில் இருந்து 10 நிமிட தொலைவில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியது சீனா..! குழப்பம் கலந்த பதற்றத்தில் இந்தியா..!

சிக்கிமில் இருந்து 10 நிமிட தொலைவில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியது சீனா..! குழப்பம் கலந்த பதற்றத்தில் இந்தியா..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In