Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாண்டியில் கலைஞர் அறிவாலயம்..! ஸ்டாலின் ஒப்புதல்: ஆனால் எங்கு அமைகிறது தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
0
பாண்டியில் கலைஞர் அறிவாலயம்..! ஸ்டாலின் ஒப்புதல்: ஆனால் எங்கு அமைகிறது தெரியுமா?
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி: புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திமுகவுக்குச் சொந்தமான இடத்தில் கலைஞர் அறிவாலயம் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று கட்டப்படவுள்ளது.

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது. மாநில அவைதலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் எம்எல்ஏ அனிபால் கென்னடி, மாநில பொருளாளர் எம்எல்ஏ செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எம்எல்ஏ சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இதில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவை, மாநிலம் முழுவதும் தொண்டர்களின் குடும்ப விழாவாக மக்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடவுள்ளோம். வரும் ஜூன் 3.ம் தேதி புதுச்சேரி மாவட்டத்தில் தொகுதிதோறும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்படும்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர், மனநலம் குன்றியோர் பள்ளிகளில் அறுசுவை உணவு வழங்கப்படும். ஜூன் மாதம் முழுவதும் ரத்ததானம், மருத்துவ முகாம்கள் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும். தொகுதிதோறும் பகுத்தறிவுப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திமுகவுக்குச் சொந்தமான இடத்தில் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி மாநில திமுகவின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்போடு கலைஞர் அறிவாலயம் கட்டப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Previous Post

ஆப்கானிஸ்தான்: `தாலிபன் அரசின் கட்டுப்பாடுகளால் குழந்தைத் திருமணம் அதிகரிப்பு’ – எச்சரிக்கும் ஐ.நா

Next Post

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு..!

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In