Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சவுக்கு சங்கருக்கு சாதகமாக தீர்ப்பு கூற நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் – இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
0
சவுக்கு சங்கருக்கு சாதகமாக தீர்ப்பு கூற நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் – இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்..
36
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாததால், அவர்களையும், அவர்களை அனுப்பியது யார் என்பதையும் கண்டறிய சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி இருக்கிறார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.

Previous Post

`போட்டியிட விருப்பமில்லை..!’ -கட்சியிலிருந்து 75-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் விலகல்..ரிஷி சுனக்கால் அகல பாதாளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி..?

Next Post

தீவிரமடையும் புனே சொகுசு கார் பலி: ரத்த மாதிரியை மாற்றிய தடயவியல் மருத்துவர்கள், தந்தை , தாத்தா கைது..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீவிரமடையும் புனே சொகுசு கார் பலி: ரத்த மாதிரியை மாற்றிய தடயவியல் மருத்துவர்கள், தந்தை , தாத்தா கைது..

தீவிரமடையும் புனே சொகுசு கார் பலி: ரத்த மாதிரியை மாற்றிய தடயவியல் மருத்துவர்கள், தந்தை , தாத்தா கைது..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In