Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டபுள் , டிரிபிள் என்ஜின் கதை விடுவாங்க.. காங். செய்வதையே சொல்லும்-ம.பியில் பிரியங்கா அனல் பிரசாரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள்
0
டபுள் , டிரிபிள் என்ஜின் கதை விடுவாங்க.. காங். செய்வதையே சொல்லும்-ம.பியில் பிரியங்கா அனல் பிரசாரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Mathivanan Maran
Updated: Monday, June 12, 2023, 14:24 [IST]
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியான கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றி இருக்கிறது என தெரிவித்தார் பிரியங்கா காந்தி. 230 தொகுதிகளைக் கொண்டது மத்திய பிரதேச சட்டசபை. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. சுயேட்சைகள், இதர கட்சிகள் இணைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. முதல்வராக கமல்நாத் பதவி வகித்தார். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. தற்போது பாஜக ஆட்சி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் சமபலத்துடன் களத்தில் இருக்கின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே வாக்கு சதவீத வேறுபாடு 1% . தற்போதைய ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதால் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவே வராது என இதுவரையிலான அனைத்து தேர்தல் கணிப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு இம்முறை 50 தொகுதிகளுக்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் எனவும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 6 கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நடத்திய கருத்து கணிப்பும் அடக்கம். இவை அனைத்துமே பாஜகவுக்கு பெருந்தோல்வி காத்திருக்கிறது என்றே சொல்லுகின்றனவாம். இது பாஜக மேலிடத்தை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்கி உள்ளார். நர்மதை நதிக்கு பூஜை செய்த பின்னர் தமது பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார். ஜபல்பூரில் பிரியங்கா காந்தி இன்று பிரசாரம் செய்தார். அங்கு ஹனுமானின் கடாயுதத்தை வைத்து பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா. டபுள் என்ஜின், டிரிபிள் என்ஜின் அரசாங்கம் என்றெல்லாம் பேசுவார்கள்.. அதெல்லாம் எடுபடாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் மக்கள் , காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துள்ளனர். ஆகையால் மத்திய பிரதேச மாநில வாக்காளர்களும் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Congress General Secretary Priyanka Gandhi Vadra kick starts the campaign for Madhya Pradesh Assembly Election 2023.

.

Previous Post

ஈழம் vs திராவிடம்… வெடித்த சோசியல் மீடியா வார்! – பின்னணி என்ன?! |Eelam vs Dravidam- Social media war erupted!- What is the background?

Next Post

திருமணிமுத்தாற்றின் கரைகளில் கடைகள் வைக்க வாங்கப்பட்ட பெட்டிகள் பாழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமணிமுத்தாற்றின் கரைகளில் கடைகள் வைக்க வாங்கப்பட்ட பெட்டிகள் பாழ்

திருமணிமுத்தாற்றின் கரைகளில் கடைகள் வைக்க வாங்கப்பட்ட பெட்டிகள் பாழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In