மத்திய வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான ‘ரீமெல்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமாா் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகா் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் ரீமெல் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும், ரீமெல் புயல் அதி தீவிரப் புயலாக மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
