Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காலிறுதியில் சிந்து, அஷ்மிதா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மலேசியாவில் நடைபெறும் சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

இப்போட்டியில் பங்கேற்ற இந்தியா்களில், தற்போது இவா்கள் இருவா் மட்டுமே களத்தில் உள்ளனா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 21-13, 12-21, 21-14 என்ற கேம்களில், தென் கொரியாவின் சிம் யு ஜின்னை 59 நிமிஷங்கள் போராடி வென்றாா். அதேபோல், அஷ்மிதா சாலிஹா 21-19, 16-21, 21-12 என்ற கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் பெய்வென் ஜாங்கை 43 நிமிஷங்கள் போராடி வீழ்த்தி அசத்தினாா்.

எனினும், ஆடவா் ஒற்றையரில் கிரண் ஜாா்ஜ் 13-21, 18-21 என்ற கணக்கில், 5-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் 44 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில், சிம்ரன் சிங்கி/ரித்திகா தாக்கா் ஜோடி 17-21, 11-21 என, 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் பியா்லி டேன்/தினா முரளிதரன் இணையிடம் 32 நிமிஷங்களில் வீழ்ந்தது. அதேபோல், 7-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையும் 18-21, 22-20, 14-21 என, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்/யு சியென் ஹுய் ஜோடியிடம் 1 மணி நேரம் 10 நிமிஷங்கள் போராடித் தோற்றது.

ஆடவா் இரட்டையரில், கிருஷ்ண பிரசாத்/சாய் பிரதீக் கூட்டணி 11-21, 9-21 என, 3-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு ஜோடியிடம் 31 நிமிஷங்களில் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணை 9-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மலேசியாவின் சென் டாங் ஜி/டோ இ வெய் கூட்டணியிடம் 35 நிமிஷங்களில் தோல்வி கண்டது.



.

Previous Post

‘ப்ளூ கார்னர்’ நோட்டீஸ் என்றால் என்ன? எம்.பி. பிரஜ்வலுக்கு எதிராக நோட்டீஸ் ஏன்?

Next Post

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல் |Why is opposition to the TN Forest dept’s plan on the 42 elephant corridor issue? – A detailed analysis

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல் |Why is opposition to the TN Forest dept’s plan on the 42 elephant corridor issue? – A detailed analysis

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? - ஓர் விரிவான அலசல் |Why is opposition to the TN Forest dept's plan on the 42 elephant corridor issue? - A detailed analysis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In