இது குறித்து தென்மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் சிவசேனா(உத்தவ்) மூத்த தலைவர் அனில் தேசாயிடம் பேசியபோது, “மும்பை எப்போதும் பாலாசாஹேப் தாக்கரேயின் கோட்டையாக இருக்கிறது. சிலர் இன்று பாலாசாஹேப் அரசியல் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாலாசாஹேப் தாக்கரேயின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்பது மக்களுக்கு தெரியும். வளர்த்துவிட்ட சிவசேனாவிற்கு பா.ஜ.க என்ன துரோகம் செய்தது என்பதும் மக்களுக்குத் தெரியும்’’ என்றார்.

பா.ஜ.க சார்பில் வடமத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் உஜ்வல் நிகம் பேசும்போது, “கடந்த பத்தாண்டுகளில் முன்பையில் ஏதாவது வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறதா… மும்பையில் 10 மெட்ரே ரயில் திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் வந்திருக்கின்றன. பாதுகாப்பான வளர்ச்சி மிக்க மும்பைக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். இங்கு அனுதாபத்திற்கெல்லாம் இடமேயில்லை’’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை மும்பைக்கு வந்து சென்றார். மோடி அலையை மட்டுமே பா.ஜ.க பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால், மக்களிடையே கூட்டணி, சின்னம் உள்பட யாருக்கு வாக்களிப்பது என்பது வரையிலான குழப்பங்கள் தேர்தல் நாள் வரை அதிகமாகவே நிலவியதை பார்க்க முடிந்தது. நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் பதிவான வாக்கு சதவிகிதமும் கடந்த தேர்தல்களை விடை குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் தேர்தல் களம் அனலாகவே தகித்தது. மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் மக்கள் தங்களின் முடிவுகளை வாக்குகளாக தெரிவித்துவிட்டார்கள். முடிவுகள் ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
