அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில், “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!” என்று ராகுல் காந்தி மக்களுடன் உரையாடும் விடியோவை நேற்று வெளியிட்டு இருந்தார்.
இப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி சர்ச்சையானது. மேலும், செல்லூர் ராஜு அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.
தற்போது ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தளப் பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.
