முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.
போராட்ட களத்தில் மட்டுமல்ல, பெளத்த பார்வையில் பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர். இன்று அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்.!
அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த நாளில் முதல்வர் கூறியுள்ளதாவது..
தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
என்று கூறினார்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை