Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2024 - Updated on May 20, 2024
in அரசியல் செய்திகள்
1
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜக வேட்பாளருக்கு 8 முறை இளைஞர் ஒருவர் வாக்களித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில்,தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ஆம் தேதி அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்தநிலையில் தற்போது ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதலங்களில் வெளியான வீடியோ ஒன்றில், பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு, இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவை தனது பக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையமே விழித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.

चुनाव आयोग जी,

देख रहे हैं.. एक लड़का 8-8 बार वोट कर रहा है.

अब तो जागिए. pic.twitter.com/2UQqE1XfLv

— Congress (@INCIndia) May 19, 2024

நாட்டில் அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆம் தேதி 4 கட்ட வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5 ஆம் கட்டமாக நாளை மோகன்லால்கஞ்ச், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, ஃபதேபூர், பாரபங்கி, கௌசாம்பி, பைசாபாத், கைசர்கஞ்ச் மற்றும் கோண்டா ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

.

Previous Post

தென்னிந்தியர்கள் ’ஆப்ரிக்கர்கள்’ போல் இருப்பதாக சாம் பித்ரோடா கருத்து; பிரதமர் மோடி கண்டனம்

Next Post

`குற்றாலத்தில் உயிர்போன பின் எச்சரிக்கின்றனர்!' – தமிழக அரசைக் குற்றம்சாட்டும் ஆர்.பி.உதயகுமார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`குற்றாலத்தில் உயிர்போன பின் எச்சரிக்கின்றனர்!' – தமிழக அரசைக் குற்றம்சாட்டும் ஆர்.பி.உதயகுமார்

`குற்றாலத்தில் உயிர்போன பின் எச்சரிக்கின்றனர்!' - தமிழக அரசைக் குற்றம்சாட்டும் ஆர்.பி.உதயகுமார்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அவர் எந்த கட்சிக்கு வாக்களித்து இருந்தாலும் அதாவது எட்டு முறை வாக்களிப்பது கடுமையான குற்றம் அதற்காக அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In