நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கிடையில், மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும், ஜூலை 1-ம் தேதி தங்கள் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருப்பதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு ஏழைப் பெண்ணின் கணக்கிலும், ரூ. 8,500 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்.
இது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நடக்கும். இந்தத் தொகை தொடர்ந்து வரும். இந்தியாவிலிருந்து வறுமையை அகற்ற அனைத்து வகையிலும் கடுமையாகப் போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தியின் பிரசாரத்துக்குப் பதிலளித்த பிரதமர் மோடி,“ராகுல் காந்தி ஷாஹி ஜாதுகர் (அரச மந்திரவாதி). அவர் வறுமையை அகற்றும் கருத்து மூலம் நாட்டையே திகைக்க வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி சொல்வதைப் போல் அந்த ஏழைப் பெண்களுக்கு ஏன் வங்கி கணக்கில் மேஜிக் நடந்தால் சந்தோஷமே நிரந்தரமாக வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் மத்திய புலனாய்வு துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு நவீன உபகரணங்கள் அதாவது செல்போனை இடைமறித்து கேட்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும் மற்றும் தானே தலையிடும் சூமோட்டோ பவரை இந்த இரண்டு துறைக்கும் கொடுக்க வேண்டும் அப்படி நடக்கும் பட்சத்தில் நம் நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒழியும் வறுமையும் ஒழியும்