Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்… நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் உறுதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்… நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் உறுதி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில், மாநிலங்களவை எம்.பி  ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவியாக இருந்த ஸ்வாதி மலிவால் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் திங்கட்கிழமை காலை முதலமைச்சரை சந்திக்க சென்றபோது முதலமைச்சரின் உதவியாளரான பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக டெல்லி போலீசுக்கு தொலை பேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது

ஆனால் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் பிபவ் குமார் டெல்லி முதலமைச்சரின் வீட்டில் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

விளம்பரம்

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை பாஜக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில்  பெண் எம்பி தாக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், தலைநகர் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

அதில், கெஜ்ரிவாலின் கேரண்டி என 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தனது கைது காரணமாக, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க – இலவச கல்வி… 200 யூனிட் இலவச மின்சாரம்… மக்களவை தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் ‘10 கேரண்டி’

முதல் வாக்குறுதியாக, நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஏழை மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இலவச கல்வி மற்றும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்… 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்? | Kidney Transplant: Pig’s kidney transplanted man dies

Next Post

`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?’ – விகடன் கருத்துக்கணிப்பு | Vikatan Poll results about 3 years of DMK government progress led by CM Stalin

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?’ – விகடன் கருத்துக்கணிப்பு | Vikatan Poll results about 3 years of DMK government progress led by CM Stalin

`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?' - விகடன் கருத்துக்கணிப்பு | Vikatan Poll results about 3 years of DMK government progress led by CM Stalin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In