Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமலாக்கத்துறை, சிபிஐ-யை வைத்து பிரதமர் மேட்ச் பிக்சிங் செய்கிறார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in அரசியல் செய்திகள்
0
அமலாக்கத்துறை, சிபிஐ-யை வைத்து பிரதமர் மேட்ச் பிக்சிங் செய்கிறார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.

அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அமலாக்கத்துறை, சிபிஐ, வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துதான் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் செய்வதாகவும், அது இல்லை என்றால் பாஜகவினர் தேர்தல்களில் வெல்ல முடியாது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது.

விளம்பரம்

அதற்கு பதிலளித்த அவர், ”கர்நாடகா, தெலங்கானா மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்படி என்றால் அவர்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கேட்கட்டும். உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஆதரவான தீர்ப்பை சொல்லிவிட்டால், ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது என கூறுவார்கள். அதுவே ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வாக்குச்சீட்டு இயந்திரத்திற்கு ஆதரவாக தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: தென்மாநிலங்களில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும்? – அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

விளம்பரம்

மேலும் நாட்டில் 12 லட்ச வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை எதுவும் இணையத்தில் கூட ஒன்றோடொன்று இணைக்கப்படவில்லை. அது அனைத்திலும் குளருபடி செய்ய முடியுமா என்ன? அப்படி என்றால் எந்த எதிர்கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. இந்த சிந்தனையே குழந்தைத்தனமாக உள்ளது.

அவர்கள் தோல்வியடையப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும். அதற்காக தான் களத்தை தயார் செய்கிறார்கள். அவர்கள் தோற்றால் சரத் பவார், உத்தவ் தாகரே மீது பழியை போட்டுவிடுவார்கள். நேரு குடும்பத்தினரை காப்பற்றி விடுவார்கள். நீங்கள் ஊழல் செய்திருந்தால், சட்டம் அதற்கேற்றவாறு செயல்படும்” என தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் ஊழல் செய்தவர்கள் பாஜகவில் இணைந்தால் அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, “எங்கள் அரசு விசாரணைகளில் தலையிடுவதில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தன்னாட்சி பெற்ற அமைப்பு. மேலும் ஒருவர் எங்கள் கட்சியில் சேர விரும்பினால், அவர்கள் பிண்ணனியை பார்ப்போம். பலர் எங்கள் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் மீது தவறான வழக்குகள் இருந்தால் எங்கள் கட்சியில் நாங்கள் சேர்த்துக்கொள்வதில்லை” என தெரிவித்தார்.

.



.

Previous Post

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

Next Post

CPCL: நாகை; சிபிசில் நிறுவனத்திற்கு எதிராக 11 நாள்கள் நடைபெற்ற போராட்டம்; பேச்சு வார்த்தையில் வாபஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CPCL: நாகை; சிபிசில் நிறுவனத்திற்கு எதிராக 11 நாள்கள் நடைபெற்ற போராட்டம்; பேச்சு வார்த்தையில் வாபஸ்!

CPCL: நாகை; சிபிசில் நிறுவனத்திற்கு எதிராக 11 நாள்கள் நடைபெற்ற போராட்டம்; பேச்சு வார்த்தையில் வாபஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In