Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விபத்தில் சிக்கிய மினி லாரி… 7 பெட்டிகளில் இருந்த ரூ.7 கோடி… சோதனையிட்ட போலீசாருக்கு ஷாக்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in அரசியல் செய்திகள்
0
விபத்தில் சிக்கிய மினி லாரி… 7 பெட்டிகளில் இருந்த ரூ.7 கோடி… சோதனையிட்ட போலீசாருக்கு ஷாக்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விபத்தில் சிக்கிய மினி லாரியில் கட்டுக்கட்டாக 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டமான விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி மீது எதிரே வந்த பெரிய லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து.

விளம்பரம்

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் உடனே காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மினி லாரியில் 7 பெரிய பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தன. மேலும் சில ரூபாய் நோட்டுகளும் சாலையில் சிதறி கிடந்தன.

இதையும் படிக்க : மோடி அல்ல… பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அமித்ஷா… கெஜ்ரிவால் சொன்ன காரணம் – பதிலடி கொடுத்த அமித் ஷா

இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் மினி லாரியில் 7 பெட்டிகளில் இருந்த பணக்கட்டுகளை மீட்டனர். அவற்றில் இருந்த மொத்த பணத்தையும் கணக்கிட்டபோது 7 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. எனவே 7 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய மினி லாரியில் 7 கோடி ரூபாய் பறிமுதல் கைப்பற்றப்பட்டிருப்பது ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.



.

Previous Post

லட்சத்தீவை அடைவதற்கு இப்படி ஒரு வழி இருக்கா – சூடு பிடிக்கும் லட்சத்தீவு சுற்றுலா! | Mangalore to Lakshadweep high speed ferry service started – Now Reach Lakshadweep easily

Next Post

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In