இந்தநிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், “ஒடிசாவில் எதிர்பாராத விதமாக நடந்தேறிய கோர ரயில் விபத்தை காரணம் காட்டி, மாநிலத் தலைநகர், பிற விமான நிலையங்களில் இருந்து செல்லக் கூடிய மற்றும் இங்கு வரக் கூடிய விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது.
திடீர் கட்டண உயர்வு காணப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும். அப்படி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்!” எனத் தெரிவித்திருக்கிறது. அதேபோல, ரயில் விபத்து காரணத்தால் விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ, கால அட்டவணை மாற்றப்பட்டாலோ எந்தவித கூடுதல் தொகையையும் பயணிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது!” என அறிவுறுத்தியிருக்கிறது.
இதனையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கையில் இருந்த விமான போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு, இப்போது தனியாரிடம் விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கெஞ்சிக்கொண்டு இருக்கிறது மத்திய அரசு என விமர்சிக்கிறார்கள்.

