Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிதாக வீடு கட்டிய முதியவரிடம் பணம் கேட்டு தாக்குதல்; திமுக பிரமுகர்கள் மீது புகார்… சென்னையில் அதிர்ச்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 3, 2024
in Default
1
புதிதாக வீடு கட்டிய முதியவரிடம் பணம் கேட்டு தாக்குதல்; திமுக பிரமுகர்கள் மீது புகார்… சென்னையில் அதிர்ச்சி!
35
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் சினிமா பட பாணியில் புதிதாக வீடு கட்டி வரும் முதியவரிடம், 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புதிதாக வீடுகட்டும் முதியவரை பணம் கேட்டு மிரட்டுவது போல காட்சிகள் அமைந்திருக்கும். அதுபோல் தற்போது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மண்ணு ரமணய்யா(74). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் 15 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார்.

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

தற்போது கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், 188-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் என்பவர் தனது ஆதரவாளர்களான திமுக பிரமுகர் விமல் உள்ளிட்ட சிலருடன் ரமண்ணய்யாவிடம் சென்று, ஆந்திராவில் இருந்து வந்து வீடு கட்டுவ? பணம் கேட்டால் தரமாட்டியா என கூறி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர்.

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ரமணய்யா இதில் நிலைக்குலைந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை‌மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட முதியவர், திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பகுதிகளில் புதிதாக வீடுகட்டும் நபர்களை குறிவைத்து சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Previous Post

திமுகவினர் அமைத்த நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு!

Next Post

அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்… மிசா பாரதி தாக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்… மிசா பாரதி தாக்கு!

அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்... மிசா பாரதி தாக்கு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த வழக்கில் வார்டு மாமன்ற உறுப்பினர்களை தவிர்த்து வேறு சிலரை கைது செய்து விட்டனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In