செங்குன்றத்தில்மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுக் குழு செங்குன்றம் 7 ஸ்டார் குழு சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று மாபெரும் வாக்காளர் விழிப்பு உணர்வு பேரணி செங்குன்றம் காமராஜர் சிலை தொடங்கி கூட்டுச் சாலை வரை சங்கத் தலைவர் அருண்பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், செங்குன்றம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், உதவி ஆய்வாளர் தம்பிராஜ், சமூக செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழிப்பு உணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில் 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பது நமது கடமை, எனது ஓட்டு எனது உரிமை போன்ற பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.


