Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன்? –  ப.சிதம்பரம் கேள்வி
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இந்தியப் பகுதிகளை வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்கவில்லை என்றால், சீனாவுடன் மத்திய அரசு 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக தீவிரம் காட்டிருந்தால், தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்? மேலும் இந்த பிரச்னையில் சட்டரீதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தோ்தல் நேரத்தில் இதைப்பற்றி பேசுவது, பாஜகவின் வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக பேசப்படுவதாக கூறினார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை அனைவரையும் சென்றடைந்துள்ளதால், கிராமப்புற மக்கள்கூட அதைப் பற்றிப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பத்து ஆண்டு ஆட்சியில் இருந்து வரும் பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த சில மணிநேரங்களிலேயே சிதைந்துபோனது.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், கட்டபொம்மன் போன்றோரை போல தாங்கள் போராடுவதாக கூறும் பாஜக, உண்மையில், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஆயிரம் ச.கி.மீ.பகுதிகளை அவர்களால் மீட்க முடியவில்லையே ஏன்?

மேலும், இந்தியப் பகுதிகளை வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்கவில்லை என்றால், சீனாவுடன் மத்திய அரசு 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தில் ஆளுநர் பதவியை நீக்கும் திமுகவின் தீர்மானம் குறித்த கேள்விக்கு, “ ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது, ஆனால் நாடாளுமன்ற ஆதரவுடன்தான் அது முடியும்” என்றார் சிதம்பரம்.

.

Previous Post

“பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியை முழுமையாக வழங்குவதில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

Next Post

துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நீரில் மிதக்கும் விமானங்கள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நீரில் மிதக்கும் விமானங்கள்..

துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நீரில் மிதக்கும் விமானங்கள்..

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In