தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மலையரசன் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தில் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சுகுமார், அதே போல் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் துரைமுருகன் ஆகொயோர் வீடுகளில் காலையில் இரண்டு திமுக நிர்வாகிகளின் வீடுகளில் இன்று வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி வெங்கடேஸ்வரா தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் 3 சொகுசு கார்களில் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்திலுள்ள மேலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறலாம் என குறிப்பிடுகின்றது.
