Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 10, 2024
in Default
1
”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!
48
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பரப்புரையில் ஒவ்வொரு கட்சியும் மாறிமாறி எதிர்தரப்பு குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், “மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

அவர் அளித்துள்ள பேட்டியில், ”வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்சனைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். ‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என அதில் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Previous Post

கர்நாடக அதிமுக மாநிலச் செயலர் ராஜினாமா: அதிர்ச்சி பின்னணி..

Next Post

ரமலானில் சுவிக்கி மூலம் 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டன: ஸ்விக்கி தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரமலானில் சுவிக்கி மூலம் 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டன: ஸ்விக்கி தகவல்

ரமலானில் சுவிக்கி மூலம் 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டன: ஸ்விக்கி தகவல்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பிஜேபி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருகிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் தமிழ்நாட்டில் கண்டிப்பாக வராது அதற்கு முக்கிய காரணம் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரையும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்று சொல்லி திணிக்கப்பட்டுள்ளனர் மேலும் உலக வங்கியில் அதிகபட்ச கடன் வாங்கப்பட்டுள்ளது பொருளாதார வீழ்ச்சி கடுமையாக உள்ளது டாலரின் மதிப்பும் மிகவும் உயர்ந்துள்ளது அதாவது இந்திய பணத்தின் மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டது இதன் பிறகும் பிஜேபி கட்சிக்கு வந்தால் இந்தியா ஒரு பிச்சைக்கார நாடாகிவிடும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In