Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” – இஸ்ரேலை முழுமையாக கைவிட்ட அமெரிக்கா…. விரைவில் போர் மூளும் அபாயம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 10, 2024
in Default
1
“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” – இஸ்ரேலை முழுமையாக கைவிட்ட அமெரிக்கா…. விரைவில் போர் மூளும் அபாயம்..!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல் அவில்: இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை செய்துவரும் அமெரிக்கா, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி நேர்காணலில் கூறும்போது, “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்வது தவறு என்றே நான் நினைக்கிறேன். அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது.

காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இடையே போர் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இஸ்ரேல், சிரியா நாட்டிலுள்ள ஈரானின் தூதரகத்தை குண்டு வைத்து தகர்த்தது. இந்த குண்டுவெடிப்பில் ஈரானின் வெளியுறவு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை கடுமையாக கண்டித்த ஈரான் நாங்கள் தக்க பதிலடி உடனடியாக கொடுப்போம் என்று கூறியுள்ளது. அமெரிக்காவும் இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளது. இந்த நிகழ்வும் அமெரிக்க முழுமையாக இஸ்ரேலை தற்போது கைவிட்டுள்ளதையே காட்டுகிறது. எனவே ஈரான் உடனடியாக இஸ்ரேலை தாக்கும் என்று கூறப்படுகிறது.

Previous Post

‘என் பொணத்தை தாண்டி போ…’ பிரச்சார வாகனத்தின் முன் படுத்து, ஊருக்குள் நுழைய விடாமல் தர்ணாவில் ஈடுபட்ட பெண்!

Next Post

கர்நாடக அதிமுக மாநிலச் செயலர் ராஜினாமா: அதிர்ச்சி பின்னணி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்நாடக அதிமுக மாநிலச் செயலர் ராஜினாமா: அதிர்ச்சி பின்னணி..

கர்நாடக அதிமுக மாநிலச் செயலர் ராஜினாமா: அதிர்ச்சி பின்னணி..

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In