Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவுக்கு கிடைத்தது 4000 ச.கி.மீ..! கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு உண்மைகள் இருக்கா..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 4, 2024
in Default
1
இந்தியாவுக்கு கிடைத்தது 4000 ச.கி.மீ..! கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு உண்மைகள் இருக்கா..!
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கச்சத்தீவு : பரப்பளவு – 285 ஏக்கர் மற்றும் 20 சென்ட் தீவு…

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள்தான்.

1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

கச்சத்தீவு ஏன் தாரைவாக்கப்பட்டது ?

1920 ஆம் ஆண்டுகளில் இருந்து கச்சத்தீவு மீதான ஆர்வம் இலங்கைக்கு அதிகரித்தது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சேதுபதி மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னர் இந்திய அரசாங்கத்தின் வசம் வந்தது.

1970களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கையின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. “கச்சத்தீவு தொடர்பான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. அந்தத் தீவின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை விட்டுத்தர வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளின் குழு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியது.

மோடி, கச்சத்தீவு

இந்தப் பின்னணியில்தான், 1974 ஜூன் 28ஆம் தேதி இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கைக்குச் செல்லும்படி இந்தக் கோடு வரையறுத்தது. இருந்தபோதும், அங்கே மீன் பிடிக்கும் உரிமையும் யாத்ரீகர்கள் அந்தத் தீவுக்கு விசா இன்றி செல்லும் உரிமையும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஒப்பந்தம் இது தொடர்பாக கையெழுத்தானது. அதன்படி, “இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க மாட்டார்கள்” என்று கூறியது. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து, நெருக்கடி நிலை காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் கையெழுத்தானது. இதன்படி கன்னியாகுமரிக்கு கீழே சுமார் 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் எனும் இடத்தை ( நீருக்கடியிலுள்ள பீடபூமி )இந்தியா பெற்றது, இது ஒரு முக்கியமான மீன்கள் அதிகம் வரும் இடமாகும், மேலும் இந்த இடம் அதிக அளவு கச்சா எண்ணை கொண்ட பீடபூமியாகும், வரும் காலங்களில் மேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் என்னை கிணறுகள் வற்றும் நேரத்தில் இந்த வாட்ஜ் பேங்க் இடத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும்.

கச்சத்தீவு விவகாரம் ஏன் இப்போது மீண்டும் பிரச்சனைக்குரியதாக மாறி உள்ளது?

ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகை பகுதியாக இருந்து வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதன் பின்னணி குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கோரினார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை

கச்சத்தீவை கொடுத்து இந்தியா வாங்கியது என்ன..? பலரும் அறியாத தகவல்! #KatchatheevuIssue | #Katchatheevu | #India pic.twitter.com/Ndc6sVQMlZ

— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 4, 2024

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், கச்சத்தீவை இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, இலங்கை உரிமை கோரியதாக கூறப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் ஆர்.டி.ஐ.-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவில் 1973ஆம் ஆண்டு நடந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அதற்கு மறுஆண்டில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கச்சீத்தீவை காங்கிரஸ் அலட்சியத்துடன் தாரை வார்த்தது அம்பலமாகியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கேள்வி 2015 ஆம் ஆண்டு ஆட்சியில் கேட்கப்பட்டபோது நாடு 2015-ல் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்ட கேள்விக்கு கச்சதீவு இலங்கைக்கு சொந்தம் என வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015-ல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015-ல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பதாக பா. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Previous Post

திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது.

Next Post

மக்களவை தேர்தல் 2024 | எல். முருகன் மீது வழக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்களவை தேர்தல் 2024 | எல். முருகன் மீது வழக்கு!

மக்களவை தேர்தல் 2024 | எல். முருகன் மீது வழக்கு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கச்சத்தீவு கச்சத்தீவு என்று ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அனைவரும் இந்த தேர்தல் நேரத்திலேயே பேசுகிறார்கள் அது என்ன கருமாந்திரம் புடிச்ச கச்சத்தீவு என்றே தெரியவில்லை இதில் எவர் சொல்வது உண்மை எவர் சொல்வது பொய் என்றும் புரியவில்லை எனவே கச்சத்தீவை மீட்க இயலாத இவர்கள் எல்லாம் வீராப்பு பேசுவது மிகத் தவறு மக்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருவேளை காங்கிரஸ் கட்சி தீவை கொடுத்தது தவறு என்றால் பத்து வருடங்களாக ஆட்சியை செய்து கொண்டு இருந்த பிஜேபி அதை மீட்க வேண்டியது தானே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In