மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, வெள்ளையரின் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் 104ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரமலைக் கள்ளர் முன்னேற்ற நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் இராமன், செயலாளர் இராமச்சந்திரன், பொருளாளர் கபிலபரணன், துணைத்தலைவர் அழகேசன் உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்கள் நீதியரசர் மாயாண்டி, நீதியரசர் தெய்வராஜன் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் பெருங்காமநல்லூர் சென்று தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர்.



