மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரா்கள் சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்கு சென்னை மாவட்டத்தை சாா்ந்த 65 வயதுக்குள்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் ‘சென்னை மாவட்டம் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15’ எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படைவீரா்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்..

