டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி பின்னர் அப்ரூவராக மாறிய ராகவா ரெட்டியின் தந்தை சீனிவாசலு ரெட்டி, பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தந்தை-மகன் இருவரும் YSR காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி TDP கட்சியில் சேர்ந்த நிலையில், சீனிவாசலு ரெட்டிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்ரூவராக மாறிய இன்னொருவரான ஷரத்ரெத் ரெட்டி பாஜகவுக்கு 60 கோடி தேர்தல் பத்திரங்கள் கொடுத்து கெஜ்ரிவாலின் பெயரைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் கேஜ்ரிவால் 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது நீதிபதியிடம் நேரடியாக கூறி வாதாடினார்.
கடந்த 2023 பிப்ரவரியில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி பின்னர் அப்ரூவராக மாறி ஜாமீனில் வெளியே வந்த மதுபான தொழிலதிபரான ராகவா ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராகவா ரெட்டியின் தந்தை சீனிவாசலு ரெட்டி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் ராகவா ரெட்டியின் பெயரை குறிப்பிட்டு வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது என்பதை அவரே தேடிக்கொண்டது இதற்கு அடுத்தவரை குறை சொல்வது தவறு குறை சொல்வதை விட்டுவிட்டு வரும் பிரச்சனையை எதிர் நோக்க தெரிந்து கொள்ள வேண்டும்