Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்..!! விளாசிய கமல்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2024
in Default
1
பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்..!! விளாசிய கமல்..!!
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன் இருக்கப் போகிறது. நாம் கொடுக்கிற வரியில், ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. ஆனால், இங்க நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ராங்களே அவர்களுடைய ஊரில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு 7 ரூபாயை மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது. ஆனால், அங்கே இருந்து தான் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வருகிறார்கள். அப்போ இந்த பணம் என்னாச்சு? இதனை நாம் கேட்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது ஆண்டாண்டு காலமாக நம்மை பற்றி மற்றவர்கள் சொல்லும் புகழ். நாம் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு. கடமை. இங்கே வரும் போது பிரதமர் மோடி மழலை தமிழில் ஒரு இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளில் பேசுவார். வரப்பு உயர நீர் உயரும். இது எல்லாம் நம்மளுக்கு தெரியும். ஆனால், நாம இப்படி கேட்டதே இல்லை. அட! ஒளவையாரே இன்னொரு மொழியில் இப்படி பேசியிருக்கிறார் போல சந்தேகப்படும் வகையில் மோடி பேசுகிறார்.

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அங்கே வடநாட்டில் யாராவது கட்டப்பா என்று பெயர் வைத்துள்ளனரா? வ உ சி என்று பெயர் வைத்துள்ளனரா? ஆனால், இங்கே நேரு என்று பெயர் வைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது எல்லாம் பொய். எங்கள் பெயரை கேட்டாலே தெரியும். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும். பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்“ என்று பேசினார்.

Previous Post

ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகளின் கால்களை முத்தமிட்டு சடங்கு செய்த போப் பிரான்சிஸ்!… ஏன் தெரியுமா?

Next Post

ஆரணியில் சிலிண்டர் வெடித்து பெரும் தீவிபத்து..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆரணியில் சிலிண்டர் வெடித்து பெரும் தீவிபத்து..

ஆரணியில் சிலிண்டர் வெடித்து பெரும் தீவிபத்து..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமல் ஒரு வெத்து வேட்டு இவர் மோடியை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லாதவர் அதாவது ஒரு வட்டச் செயலாளரை பற்றி பேசும் தகுதி கூட இவருக்கு இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In