Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போதைக்கும்பலின் தலைமையகமே தமிழ்நாடுதான்… பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
1
போதைக்கும்பலின் தலைமையகமே தமிழ்நாடுதான்… பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் தலைமையகம் தமிழ்நாட்டுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நமோ ஆப் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேச, அது தமிழில் அனைவரும் கேட்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ’எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகள் வழங்கினார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அவ்வாறு பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி, ”போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கம் நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த சில நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமையகம் தமிழ்நாடாக இருப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே நம் குடும்பம், நம் குழந்தைகள், நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும்.”என்றார்.

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ (கோப்பு படம்)

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ (கோப்பு படம்)

மேலும், “இதை மக்கள் அனைவருக்கும் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் நுழையும் போதை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக போராட பாஜக மட்டுமே போதுமானது. தமிழகத்தில் திமுக அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் மோசமான நிலை உள்ளது. ஊழல் மலிந்து சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் இவர்களால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தும் சாவடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள இந்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விவசாய கிணற்றில் விழுந்த மான் : லாவகமாக காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர்கள்..

Next Post

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழா : தேரோட்டம் விமர்சையாக கொண்டாட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழா : தேரோட்டம் விமர்சையாக கொண்டாட்டம்..

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழா : தேரோட்டம் விமர்சையாக கொண்டாட்டம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மோடி அவர்களே தாங்கள் சொல்வது உண்மை என்றால் அதிகாரத்தை கையில் வைத்துள்ள தாங்கள் போதைப்பொருள் கடத்துபவர்களையும் போதை பொருள் விற்பவர்களையும் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In