தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் -19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து கோடி அணிவகுப்பு தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இந்திய துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து சங்கராபுரம் பூட்டை சாலையில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதியின் வழியாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடி அணிவகுப்பு நிறைவு பெற்றது இதில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி கையில் ஏந்தி வீரநடை போட்டு நடந்துவந்ததனர்.
இந்தக் கொடி அணி வகுப்பில் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் காவல் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்…கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் இருந்து முக்கிய சாலை வழியாக பேரணியாக வந்து சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிவு பெற்றது அதன் பின் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டி செய்தியாளர்களுக்கு அளித்தார்.

