தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சித்தார்த், தன்னுடைய நீண்ட நாள் காதலியான அதிதி ராவை ரகசியமாக திருணமான செய்துக் கொண்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில காலமாக கூறபட்டு தான் வருகிறது. தற்போது திரையுலகில் இருவருமே திறமையான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், சித்தார்த். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் தான் இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்துள்ளது, இது தொடர்பாக அடிக்கடி சோஷியல் மீடியாவில் இவர்களே வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் (Aditi Rao Hydari and Siddharth Tie The Knot) செய்துள்ளதாக கூறுகின்றனர்.

சினிமா துறையில் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணம் இதற்கெல்லாம் கமெண்ட் செய்ய வேண்டியது இல்லை