Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வருமான வரித்துறையினர் வாங்கிய லஞ்சம் பறிமுதல்… பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 22, 2024
in Default
0
வருமான வரித்துறையினர் வாங்கிய லஞ்சம் பறிமுதல்… பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!
116
SHARES
187
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வருமான வரித்துறையினர் கொண்டு சென்ற 6.7 லட்சம் ரூபாயைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பறக்கும் படை வாகனங்கள்

தேர்தல் பறக்கும் படை வாகனங்கள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை அடுத்து தனிநபர் 50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டரசன் சாலை- மூர்ஸ் சாலை சந்திப்பில் நேற்று இரவு ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் கத்தை கத்தையாக 6.70 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீஸார் அந்த காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வருமானவரித்துறையில் பணியாற்றி வரும் நாராயணசாமி, அக்சய் குமார் என்பதும் விமான நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி டெல்லிக்குப் பணத்தை எடுத்துச் செல்ல முயன்ற தனியார் நிறுவன பணியாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்பது தெரியவந்தது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காரில் கொண்டு செல்லும் போது போலீஸில் சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பின்னர் வருமானவரித்துறை ஆய்வாளர் ஸ்ரீராமுலு இது தொடர்பாக முறைப்படி விளக்க கடிதம் கொடுத்து, போலீஸார் பறிமுதல் செய்த 6.7 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகளிடமிருந்து பெற்றுச் சென்றார். போலீஸார் வாகனத் தணிக்கையில் பறிமுதல் பணத்தை செய்த அலுலகத்தில் ஒப்படைக்கச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்துடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

Previous Post

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.!

Next Post

நடிகர் சூர்யாவை ஒருநாள் கடன் கேட்ட ரசிகை…ஜோதிகா கொடுத்த நச் ரிப்ளை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகர் சூர்யாவை ஒருநாள் கடன் கேட்ட ரசிகை…ஜோதிகா கொடுத்த நச் ரிப்ளை!

நடிகர் சூர்யாவை ஒருநாள் கடன் கேட்ட ரசிகை...ஜோதிகா கொடுத்த நச் ரிப்ளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In