சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார், ஆளுநர் ஆ.என்.ரவி.
உச்சநீதிமன்றத்தின் நேரடி தலையீட்டிற்கு பிறகு, அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

