Delhi: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு அமலாக்கத்துறை (ED) அவருக்கு பல சம்மன்களை அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து லோக்சபா தேர்தல் வரை தம்மை கைது செய்ய மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறையிடம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அவரை கைது செய்ய தடை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஒரு வழக்கில் கூட விசாரணை அமைப்பு முன் ஆஜராகவில்லை. இந்நிலையில், தண்டனை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பவில்லை என்றும், விசாரணைக்கு தான் அழைக்கிறேன் என அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவது உறுதி ஆனால் எப்பொழுது என்று தான் தெரியவில்லை இதை நாம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தேன்