Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

T.M.கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி.. ரஞ்சனி – காயத்ரிக்கு பதிலடி கொடுத்த மியூசிக் அகாடமி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
T.M.கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி.. ரஞ்சனி – காயத்ரிக்கு பதிலடி கொடுத்த மியூசிக் அகாடமி..
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆண்டுதோறும் சென்னையில் இருக்கும் மியூசிக் அகடமி தரப்பில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்படுவது வழக்கம். கர்நாடக இசை துறையில் ஒருவர் ஆற்றிய பங்கை பொறுத்து விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு மியூசிக் அகாடமி மாநாட்டை அவர் தலைமை தாங்குகிறார்.

ஆனால் டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்பட்டதன் காரணமாக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி இந்த ஆண்டு மாநாட்டை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளி கடிதம் எழுதியுள்ளார்.

Music Academy president has written a reply letter to music artists Ranjani-Gayatri who raised letter against musician t m Krishna. Ranjani Gayathri Issue: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி.. ரஞ்சனி - காயத்ரிக்கு பதிலடி கொடுத்த மியூசிக் அகாடமி..

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், “மார்ச் 20, 2024 அன்று உங்களது கடிதத்தைப் பெற்றேன், அதில் தேவையற்ற கூற்றுக்கள், அவதூறுகள் கருத்துக்களை மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிராக அதன் மோசமான தொனியுடன் நிரம்பி இருந்தது. அந்த அறிக்கை எனக்கு அதிர்ச்சி அளித்தது.

1942-ஆம் ஆண்டு தி மியூசிக் அகாடமியால் நிறுவப்பட்ட சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதியின் தேர்வு ஆண்டுதோறும் மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பாகும், மேலும் இது எப்போதும் கவனமாக ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படுகிறது. இசை துறையில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு டி.எம். கிருஷ்ணா தனது இசை வாழ்க்கையில், இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலான தேர்வாகும். வெளிப்புற காரணிகள் எதுவும் எங்கள் தேர்வை பாதிக்கவில்லை.

நீங்கள் விரும்பாத, தகுதியற்ற, மோசமான ரசனை கொண்டதாக நீங்கள் கருதும் ஒரு இசைக்கலைஞரை அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக வரவிருக்கும் சங்கீத அகாடமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம்.  நீங்கள் எனக்கும் அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள், இது ஒழுக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும். மேலும் உங்கள் கடிதத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது.

பொதுவாக, நீங்கள் என்னிடமும், அகாடமியிடமும் தெரிவிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கான பதில் அளிப்பதை, நான் மறுக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சனி, காயத்ரியின் ம்யூசிக் அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் முடிவைக் குறித்து பதிவுகள் இடும் நெட்டிசன்ஸில், ”அப்பட்டமான சாதி உணர்ச்சியையும், வெறுப்பையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்துகிறார்கள்” ஒரு தரப்பும், ”இது நல்ல முடிவு” என ஒருதரப்புமாக, கண்டனங்களும், ஆதரவும் இவர்களுக்குக் குவிகின்றன.

.

Previous Post

அதிமுக மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் சரவணனுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

Next Post

மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து வாட்ஸ்அப்இல் கருத்துகணிப்பு கேட்ட அமைச்சகம்: அதிரடி காட்டிய EC.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து வாட்ஸ்அப்இல் கருத்துகணிப்பு கேட்ட அமைச்சகம்: அதிரடி காட்டிய EC.

மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து வாட்ஸ்அப்இல் கருத்துகணிப்பு கேட்ட அமைச்சகம்: அதிரடி காட்டிய EC.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In