வாட்ஸ்அப் மூலம் “விக்சித் பாரத்” செய்திகளை அனுப்பி மக்களிடம் மத்திய அரசின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் பற்றிய கருத்துகணிப்பை கேட்பதை உடனடியாக நிறுத்துமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeitY) இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, இந்த விஷயத்தில் இணக்க அறிக்கை உடனடியாக MeitY யிடம் கோரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்திட்ட கடிதத்துடன், பல்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட சரிபார்க்கப்பட்ட வாட்ஸ்அப் வணிகக் கணக்குகளின் “விக்சித் பாரத் சம்பார்க்” என்னிலிருந்து மார்ச் 15 முதல் இந்தியாவிலும் சிலருக்கு வெளிநாடுகளிலும் (பாகிஸ்தான் உட்பட)செய்திகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ளது.
மோடியின் இந்த கடிதம் 10 ஆண்டு கால அரசாங்க திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது, மேலும் மோடி இந்த கடிதம் மூலம் பொதுமக்களிடமிருந்து யோசனைகள் ,பரிந்துரைகள், மற்றும் கருத்துக்களை கேட்டுள்ளார், மேலும் “ஜிஎஸ்டி, 370 வது சட்டத்தை ரத்து செய்தல், முத்தலாக் மீதான புதிய சட்டம், மேம்படுத்த மகளிர் சக்தி, ஜன்தன் சட்டம் பாராட்டி கூறியுள்ளார்.. பாராளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கணிப்பை கேட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி அரசாங்கம் தேர்தல் நடத்தை விதிகளை (எம்.சி.சி) மீறுவதாகக் குற்றம் சாட்டினார், இது தேர்தல் காலத்தில் அதிகாரபூர்வ ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது என்றார். இந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் இது போன்ற வாட்ஸ்அப் பரப்புரைகளுக்கு தடை விதித்துள்ளது.

கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை