Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. யார் இந்த சிம்லா முத்து சோழன்.?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in Default
1
அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. யார் இந்த சிம்லா முத்து சோழன்.?
264
SHARES
425
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்தார். ஆர்.கே. நகரில் சற்குணபாண்டியன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இதனைடுத்து 2016ஆம் ஆண்டு  ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு டப் கொடுக்க எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் களம் இறக்கப்பட்டார். இவரும் ஆர்.கே.நகர் தொகுதியை சுற்றி சுற்றி வந்தார்.

DMK executive Simla Muthu Cholan met Edappadi Palaniswami and joined AIADMK KAK

திமுகவில் வாய்ப்பு மறுப்பு

ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி வித்தியாசம் 50ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் சிம்லா முத்து சோழனில் களப்பணியால் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலையே ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் உரிய வாய்ப்பு வழங்காமல் வழக்கறிஞராக இருந்த மருது கணேஷ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் டிடிவி தினகரனுக்கு எதிராக டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தார்.

DMK executive Simla Muthu Cholan met Edappadi Palaniswami and joined AIADMK KAK

அதிமுகவில் இணைந்த சிம்லா

அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த் சிம்லா முத்து சோழனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சற்குண பாண்டியன் மறைவுக்கு பின் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து கட்சி பணியில் இருந்து சற்று விலகி இருந்தவர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இணைந்த உடனேயே அவருக்கு நெல்லை தொகுதி கொடுத்துள்ளார் எடப்பாடி.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஸ்ரீபெரும்பதூர் – பிரேம்குமார்
வேலூர் – பசுபதி
திருவண்ணாமலை – கலிய பெருமாள்
திருச்சி – கருப்பையா

தர்மபுரி – அசோகன்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
திருப்பூர் – அருணாசாலம்
நீலகிரி (தனி) – யோகேஷ் தமிழ்செலவ்ன்

கோவை – சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி – அப்புசாமி என்ற கார்த்திகேயன்
திருச்சி – கருப்பையா
பெரம்பலூர் – ஏடி சந்திர மோகன்

மயிலாடுதுறை – பாபு
சிவகங்கை – மணக்குடி சேகர் தாஸ்
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
நெல்லை -சிம்லா முத்து சோழன்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்

விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் – ராணி

நேற்று எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Previous Post

பொன்முடி வழக்கு: நாளை விசாரணை..

Next Post

அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் : திடீர் ரெய்டு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் : திடீர் ரெய்டு..

அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் : திடீர் ரெய்டு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In