பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.
“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே(கர்நாடகா) வந்து வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்; மற்றவர்கள் வந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறுகிறார்கள்” என ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் காபி உணவகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிகழும் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

