மக்களவைத் தேர்தலை திமுக கூட்டணியிலிருந்து சந்திக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர் தேர்வுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூரியமூர்த்தி 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், தங்கள் சமூகத்துக்கு பெண்களை ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் காதலித்தால் கொலை செய்வோம். சாதி பெருமைக்காக சொந்த சாதி பெண்களையும் கொலை செய்வோம் என்று முழுக்க முழுக்க இரு சாதி மக்களிடையே கலவத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார். தமிழகத்தில் சமூகநீதி ஆட்சியை தருகிறோம் என்று சொல்லும் திமுக அரசு, இதுபோன்ற நபருக்கு எம்.பி சீட் கொடுப்பதுதான் சமூகநீதியா, ஆணவக்கொலையை ஆதரித்து பேசுபவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது தான் கொள்கையா?. அதனால் சூரியகுமாருக்கு பதிலாக வேறு நபரை திமுக கூட்டணி பரிசீலிக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சூரியகுமார்HR Ferncrystal
முக்கியமாக, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் சூரியகுமார் போட்டியிடும் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன் மீது மோசடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வீடியோவால், சூர்யமூர்த்தி தேர்தலில் போட்டியிடுவது புதிய சிக்கலை அளித்துள்ளது.

