விவகாரத்து வழக்கு நடந்து வரும் நிலையில், மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு 1 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் ராகவன் சம்பத்ராஜ்(30). இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இளம்பெண், கடந்த 2016-ம் ஆண்டு ஊருக்கு வந்து ராகவன் சம்பத்தை திருமணம் செய்து கொண்டார்.
அதே வருடத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சேர்ந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அவரது மனைவியின் மெயிலுக்கு ஆபாச வீடியோவை ராகவன் சம்பத்ராஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனது சகோதரருக்கு இளம்பெண் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ராகவன் சம்பத் மீது பெங்களூரு சுப்ரமணிய நகர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் சகோதரர் புகார் செய்தார். இதன் பின் இளம்பெண்ணும் வெளிநாட்டில் இருந்து பெங்களூருவிற்கு வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பான வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணையை முடித்த அதிகாரிகள், ராகவன் சம்பத் மீது ஐ.டி சட்த்தின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், ராகவன் சம்பத்ராஜ்க்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், 45 ஆயிரம் ரூபாயும் விதித்து பெங்களூரு முதல் ஏசிஎம்எம் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

