Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேசபக்தர் சோனம் வாங்சுக்: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும் மற்றும் லடாக் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உறைப்பனியில் 9 நாட்களாக உண்ணாவிரதம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 14, 2024
in Default
0
தேசபக்தர் சோனம் வாங்சுக்: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும் மற்றும் லடாக் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உறைப்பனியில் 9 நாட்களாக உண்ணாவிரதம்..
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரமான கொசக்சி பசபுகழுக்கு உத்வேகம் தந்தவர் சோனம் வாங்சுக். இவர் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும், லடாக்கின் இயற்கை வளங்களை தனியார்க்கு தாரை வார்ப்பதிலிருந்து தடுத்து அங்குள்ள இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்கவும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்த்து சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் சலுகைகளை வழங்கும் படி கேட்டு 21 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரது உண்ணாவிரதம் இன்றோடு 9 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இவருடன் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கு வெப்பநிலை மைனஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் தோன்றிய அந்த வித்தியாசமான கதாபாத்திரத்தின் நிஜ வடிவமாக லடாக்கில் வாழ்ந்து வருகிறார் சோனம் வாங்சுக் என்னும் நிஜமான இந்திய தேச பக்தர்..முறையான பள்ளியில் சேரும் வாய்ப்பு கிட்டாததில் 9 வயது வரை பள்ளிப்பக்கமே தலைவைக்காத சோனம் வாங்சுக், தன் தாயிடமே தாய்மொழி வாயிலாக வாழ்க்கைப் பாடத்தை பயின்றார். அதன் பின்னர் பள்ளியில் சேர்ந்த போதும், மொழிப் பிரச்சினை காரணமாக பலரின் தூற்றுதல்களுக்கு ஆளானார் பின்னர் சரியான ஆசிரியரின் அரவணைப்பு காரணமாக சிறந்த மாணவராக பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகளை முடித்தார்.உச்ச மதிப்பெண்களை பெற்றிருந்தபோதும், நண்பன் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சி பாணியில் லடாக்கில் வித்தியாசமான பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளை வளர்த்தெடுத்தார்.

பள்ளிகளின் கற்றல் – கற்பித்தல் செயல்படுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்து அவரது சமூக சேவை பிரபலமானதில், மத்திய மாநில அரசுகள் அவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார்.

இன்னமும் லடாக் பகுதியின் கல்வி, சுற்றுச்சூழல் சார்ந்து களமாடி வரும் சோனம் வாங்சுக், அதே நோக்கத்தில் தற்போது 21 நாள் உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்.ஆறாவது அட்டவணையை அமல்படுத்தி லடாக் பிராந்தியத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரை பலகட்ட உண்ணாவிரதம் உட்பட போராட்டங்களை சோனம் வாங்சுக் தொடங்கியுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெருவிருப்பம் கொண்ட வான்சுக், காந்தி மேற்கொண்ட 21 நாள் நீண்ட உண்ணாவிரத்தை முதல் கட்டமாக தொடங்கியிருக்கிறார்.உள்ளூரை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் கொல்லும் குளிரில் லேவின் என்டிஎஸ் மைதானத்தில் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.

அமைதியான இந்த உண்ணாவிரத போராட்டத்தை சக இந்தியர்கள் மத்தியில் சென்று சேர்ப்பதற்காக, இன்றைய தினம் தனது உண்ணாவிரத போராட்டம் 9 வது நாளை எட்டியிருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சோனம் வாங்சுக்கின் புதிய உண்ணாவிரத போராட்டம், அவரது சமூக ஊடகப் பதிவுகளை அடுத்தே பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.இவரது கோரிக்கைகளை அரசு உடனடியாக கேட்டு, அவர் உண்ணாவிரதம் கடைபிடித்தே இறப்பதை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றனர்.

Previous Post

காங்கிரஸ் அதிரடி : பெண்களை அடுத்து விவசாயிகளுக்கும் 5 வாக்குறுதிகள்: MSP உடனடியாக கொண்டுவருவோம்.

Next Post

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது POCSO வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது POCSO வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது POCSO வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In