
ஆளுநர் – வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்ஆளுநர் ரவி.
முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், இந்த முயற்சியில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை பயன்படுத்தவும், வாக்களித்தவர்களுக்கு இணையவழி சான்றிதழ் கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும் இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்தவும் துணை வேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை கூறினார்.
100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும். அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பாராட்டப்படுவார்கள் என்று ஆளுநர் கூறினார்.
இதையெல்லாம் செய்யத்தான் தேர்தல் ஆணையம் பல கோடிகள் செலவு செய்கிறது, பிறகு தேர்தல் ஆணையம் எதுக்கு இருக்கு? பல்கலைக்கழக வேதர்களுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எதுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுதனும்? பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யனும்? எல்லா பணி இடங்களும் நிரப்ப என்ன செய்யனும்? இதெல்லாம்தானே அவங்க வேலை? ஆளுநர் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்க என்று நேட்டீசன்கள் ஆளுனரை கேட்டு வருகின்றனர்.

