Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போதைப் பொருள் ஒழியும் வரை அதிமுக போராட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2024
in Default
1
போதைப் பொருள் ஒழியும் வரை அதிமுக போராட்டம்..!
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாவட்டத் தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

-மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அவர்கள் #Say_NO_TO_DRUGS #Drug_Mafia_Kazhagam pic.twitter.com/BC8TqHW9Cj

— AIADMK TV (@aiadmktv) March 3, 2024

மதுரை, சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், குஜராத் கடல் எல்லையில் அண்மையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அக்கட்சி சார்பில் திமுக அரசைக் கண்டித்து நாளை (மார்ச் 4) கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

போதைப் பொருள்

போதைப் பொருள்

நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்று விடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

பெற்றோர்களே, இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள்! மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

குத்தாட்ட நடிகருக்கு பாஜக நாடாளுமன்ற சீட் : வேண்டாம் என்று விலகிய வேட்பாளர்..

Next Post

ரூ.55,000 கோடி செலவில் பிரதமர் திறந்து வைத்த மேம்பாலத்தில் 14 மாதத்திற்குள் ஓட்டை.! மாபெரும் ஊழலா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.55,000 கோடி செலவில் பிரதமர் திறந்து வைத்த மேம்பாலத்தில் 14 மாதத்திற்குள் ஓட்டை.! மாபெரும் ஊழலா?

ரூ.55,000 கோடி செலவில் பிரதமர் திறந்து வைத்த மேம்பாலத்தில் 14 மாதத்திற்குள் ஓட்டை.! மாபெரும் ஊழலா?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    திமுக அரசு போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார் இவர் முதலமைச்சராக இருக்கும்போது போதை பொருட்களை கட்டுப்படுத்தியா வைத்திருந்தார் குட்கா போதை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை டிஜிபி கி கே ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவகாரம் சிபிஐயில் நிலுவையில் இருக்கு என்பதை மறந்து விட்டு பேசுகிறார் இவர் முதலமைச்சராக இருக்கும்போதே சட்டசபைக்குள் குட்கா வந்தது ஞாபகம் இருக்கா இல்லையா சும்மா காலத்திற்கு ஏற்றார் போல் பேசக்கூடாது எடப்பாடி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In