Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடையில்லை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடையில்லை
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில், 2001 – 06ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பன்னீர்செல்வம். ‘டான்சி’ வழக்கில், ஜெயலலிதா சிறை சென்ற பின், முதல்வராக இருந்தார். பொதுப்பணித்துறை அவரிடம் இருந்தது.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், தம்பி ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி உள்ளிட்டோருக்கு எதிராக, 2006ல் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 2009 ஜூலை 30ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, 2012 ஜனவரியில் சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, 2012 அக்., 12ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பின், சிவகங்கை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தது. இதை ஏற்று, 2012 டிச., 3ல், பன்னீர்செல்வம், அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்த நிலையில், பன்னீர்செல்வம், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் பன்னீர்செல்வம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு, பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தடையில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது. மேலும், தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிக்கிறார். இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவித்து உள்ளது.

.

Previous Post

“பாஜக அலுவலக கட்டிட நிதி மோசடி மன்னன் ராஜபாண்டியன்” – தேனி பாஜகவினரின் போஸ்டர் மோதல்..

Next Post

”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை; மாற்றிவிடுங்கள்”: சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை; மாற்றிவிடுங்கள்”: சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை

''சின்னம் உங்களுக்கு 'லக்கி' இல்லை; மாற்றிவிடுங்கள்'': சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In