விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு மார்ச் 3 நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி நடத்தும் மாநில உரிமை மீட்பு மாநாடு முன்னிட்டு தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு த. ரஞ்சித்குமார் ( நகரச்செயலாளர்) தலைமை தாங்கினார்.கு. முல்லைவேந்தன்(மாவட்ட து.செயலாளர்)முன்னிலை மையும்,K.T.மாரி வரவேற்புரையும் வழங்கினர்.இரமேசு பிரபா ( மாவட்டச் செயலாளர்),இரா. ஆற்றலரசு( மாவட்ட நிதி செயலாளர் ), வே. முனியசாமி( மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்) ஆகியோர் விளக்கவுரை அளித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக R.K. செந்தில் ( காரியாபட்டி பேரூராட்சி சேர்மன்-திமுக),மெடிகோ. இராஜேந்திரன்( நகர இலக்கிய அணி செயலாளர்-திமுக) கலந்து கொண்டனர்.

