குஜராத்தில் துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் (Deep Sea) ஆழ்கடலில் பிரதமர் மோடி பிராத்தனை செய்துள்ள காணொளி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகிலுள்ள தீவான பேய்ட் துவாரகாவில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கிருஷ்ணர் கோயிலிலும் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதையடுத்து துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் ஆழ்கடலில் பிரதமர் மோடி பிராத்தனை செய்துள்ளார்.
இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர் “இது போன்ற ஒரு கோமாளியை இந்தியா பார்த்தது இல்லை” என்று பிரதமர் மோடியை குறித்து பதிவிட்டுள்ளார். பாஜக சார்பு சமூக வலைதள நேட்டீசங்கள் சவுக்கு சங்கருக்கு பதிலளித்த வண்ணம் உள்ளனர்.

