Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஒரே ரூமில் 8 பேர்.. இதான் விபத்துக்கு காரணம்! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து பற்றி ஆட்சியர் விளக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2024
in Default
1
ஒரே ரூமில் 8 பேர்.. இதான் விபத்துக்கு காரணம்! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து பற்றி ஆட்சியர் விளக்கம்..
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்திற்கு, மனித தவறே காரணம் என்றும், ரசாயனம் கலக்கும் அறையில் 8 பேர் இருந்ததே விபத்திற்கு காரணம் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஜெயசீலன், “இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையின் உரிமம் முறையாக பெற்று நடைமுறையில் தான் உள்ளது. ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.

எனவே முதல்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரிய வருகிறது. ரசாயனம் கலக்கும் அறையில் அதிகளவில் நபர்கள் இருந்ததே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்து ஏற்படாமல் இருக்க போலீசார், தீயணைப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதனிடையே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் : இயற்கை பேரிடரை அதிக துல்லியமாக இனி கணிக்கலாம்..

Next Post

பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட 5,000 அரசுப்பள்ளி சீருடைகள்… மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோர் வேதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட 5,000 அரசுப்பள்ளி சீருடைகள்… மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோர் வேதனை!

பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட 5,000 அரசுப்பள்ளி சீருடைகள்... மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோர் வேதனை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மாவட்ட ஆட்சியர் சபை கட்டு கட்டுகிறார் விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது இதுபோன்று பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு ஏழைகள் உயிரிழந்து வருகின்றனர் இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை இதற்குக் காரணம் பட்டாசு தொழிற்சாலை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மிகவும் வசதி படைத்தவர்கள் என்பதால் தான் உயிரிழப்பவர்களோ வசதியே இல்லாதவர்கள் எனவே மாவட்ட நிர்வாகம் இதை கண்டு கொள்வதே கிடையாது இந்த கலெக்டர் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இந்த பொய்யை சொல்லி வருகிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In