Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு – மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
1
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு – மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது. மதுரை மாவட்ட நடுவர்மன்ற நீதித்துறை நீதிபதி முத்துலட்சுமி விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் 13 ஆண்டுகால வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. குற்றம்சாட்டபட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க.அழகிரி (அப்போது திமுகவில் இருந்தார்) மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அப்போது பணப்பட்டுவாடா நடந்ததாகவும், சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரி, அவரும் ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயருமான மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9-ம் தேதி நடந்த விசாரணையில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

பிறழ்சாட்சியாக மாறிய தாசில்தார்…: வழக்கு விசாரணையின் போது, “மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை. பணப் பட்டுவாடா புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதால் வாக்குவாதம் எழுந்து, மோதலாகியது” என்று தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தாசில்தார் காளிமுத்து நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறினார். அவரைத் தொடர்ந்து மற்ற சாட்சிகளும் பிறழ்சாட்சியாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

‘நான் தான்டா ரவி, உன்னால முடிஞ்சால் தொட்டுப்பார்’ – கொக்கரித்த பாஜககாரரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..

Next Post

அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக வசூலித்த பணத்தை பாஜக பயன்படுத்தும், ஆனால் நியாயமாக நாம் சேகரித்த பணம் சீல் வைக்கப்பட்டுள்ளது.! – கார்கே காட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக வசூலித்த பணத்தை பாஜக பயன்படுத்தும், ஆனால் நியாயமாக நாம் சேகரித்த பணம் சீல் வைக்கப்பட்டுள்ளது.! – கார்கே காட்டம்..

அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக வசூலித்த பணத்தை பாஜக பயன்படுத்தும், ஆனால் நியாயமாக நாம் சேகரித்த பணம் சீல் வைக்கப்பட்டுள்ளது.! - கார்கே காட்டம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அடி வாங்கிய தாசில்தார்ம் உடன் இருந்த வருவாய் துறை அலுவலர்களும் அஞ்சாயிரம் பத்தாயிரம் கொடுத்தாலே வாங்கிக்கொண்டு பிறழ் சாட்சி சொல்வது வழக்கம். எனவே இவர்கள் பிழை சாட்சியாக மாறியது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது போன்ற தாசில்தார்களுக்கு இரண்டாம் நிலை மாஜிஸ்ட்ரேட் என்று பெயர் வேறு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In