Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘நான் தான்டா ரவி, உன்னால முடிஞ்சால் தொட்டுப்பார்’ – கொக்கரித்த பாஜககாரரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
1
‘நான் தான்டா ரவி, உன்னால முடிஞ்சால் தொட்டுப்பார்’ – கொக்கரித்த பாஜககாரரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..
56
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டிக் கேட்க காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை பெரம்பூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி பாஜகவினர் அவரை வரவேற்க பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரம்பூர் அகரம் சந்திப்பில் பாஜகவினர் மேள தாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் நிலைய காவலர் கணேஷ் குமார் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் ஒதுங்கி நிற்குமாறு பாஜகவினரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக பிரமுகரும், அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரவிச்சந்திரன் என்பவர், காவலர் கணேஷ் குமாரை ஆபாசமாக திட்டினார்.

அத்துடன் ‘நான் யார் தெரியுமா? நான் தான்டா ரவி. பெரம்பூர்ல யாரைக் கேட்டாலும் என் பெயரைத் தெரியும்’ என்று கூறியதுடன் ‘ நான் அப்படி தான் பேசுவேன். உன்னால முடிஞ்சால் என்னைத் தொட்டுப்பார். உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று மிரட்டியுள்ளார்.

கைது

கைது

தகவல் அறிந்து அங்கு வந்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், இப்படி பேசக்கூடாது என அவரை சமாதானப்படுத்தினார். ஆனால் ரவிச்சந்திரன் அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மேளம் அடிக்கும் கட்டையை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவலர் கணேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் செம்பியம் போலீஸார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தப்பியோடிய ரவிச்சந்திரனை இன்று அதிகாலையில் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

CPIM ஆர்ப்பாட்டம் : விலைவாசி கட்டுப்பாடு போன்ற பல அம்ச கோரிக்கைகள்.

Next Post

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு – மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு – மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு - மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஏன் ரவி ஓடி ஒளியுற நீ எல்லாம் எதுக்கு தில்லா பேசுற பேசும்போது குடிச்சிருந்தியா. போதையில பேசுறது போதை தெளிஞ்சா ஓடி விடுகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In